வங்காள தேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டத்தின் காணொளி, இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டாவில் கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று நடந்த வகுப்புவாத வன்முறையின் சமீபத்திய காட்சிகள் என்ற தவறான கூற்றுடன் வைரலானது.
அந்த காணொளி நடந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை என்றும், நவம்பர் 2023ஆம் தேதி வங்காளதேச தேசியவாதக் கட்சி (பி.எம்.பி) அங்குள்ள சில்ஹெட் மாவட்டத்தில் நடத்திய போராட்டத்தைக் காட்டுகிறது என்று பூம் கண்டறிந்துள்ளது. இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.
இந்த ஆண்டு கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று மேற்கு வங்காளத்தின் மால்டாவில் உள்ள மோதபரியில் வகுப்புவாத மோதல்கள் நடந்தன. இந்த பகுதியில் கூடுதல் படைகள் இருப்பதையும், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதையும் உள்ளூர் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியதால், இங்கு நிலைமை பதட்டமாக உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில், "மேற்கு வங்காளத்தின் மால்டாவில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள்’ என்ற தவறான கூற்றுடன், ஆம்புலன்சை எரிப்பது உட்பட, தெருவில் வாகனங்களை சிலர் சேதப்படுத்தும் காணொளி பகிரப்பட்டது. மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி, தமிழிலும், “மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் ஹிந்து கடைகள் குறிவைத்து எறித்து வருகின்றனர்...இது தான் அமைதி மார்க்கம் மா??? நாளை எல்லோருக்கும் இதே நிலை தான் வரும்…,” என்ற கருத்துடன், இந்த காணொளி பகிரப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு
வைரலான இந்த காணொளியில் உள்ள சம்பவம், மேற்கு வங்காளத்தில் நடந்தது அல்ல என்றும், இது வங்காள தேசத்தில் நடந்தது எனவும் பூம் கண்டறிந்தது.
காணொளியில் உள்ள காட்சிகளை, கீஃபிரேம்களாக்கி நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முதலில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடுதல், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று வங்காள தேசத்தில் இருந்து இயங்கும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்ததை கண்டறிந்தோம்.
நாங்கள் குறிப்பிட்ட சில வார்த்தைகளை கொண்டு கூகுளில் தேடினோம். அப்போது, வங்காள தேசத்தின் உள்ளூர் செய்தி நிறுவனமான டெய்லி சில்ஹெட் மிரரில், வங்காள மொழியில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று இந்த சம்பவம் குறித்த செய்தியைக் கண்டறிந்தோம். இந்த செய்தியில், வைரலான காணொளியின் ஸ்கிரீன் ஷாட்கள் இருந்தன. மேலும், பி.என்.பி மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் போராட்டக்காரர்கள், அங்குள்ள சுபிட் பஜாரில் ஆம்புலன்ஸ்களையும் பிற வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதியன்று ப்ரோதாம் அலோ மற்றும் டிபிசி நியூஸ் உட்பட பல வங்காள தேச செய்தி ஊடகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோதோம் அலோவின் வெளியிடப்பட்ட காணொளி வைரலான காணொளியில் உள்ள அதே காட்சியைக் கொண்டுள்ளது.