HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Fact CheckNo Image is Available
Fast CheckNo Image is Available
ExplainersNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Fact CheckNo Image is Available
Fast CheckNo Image is Available
ExplainersNo Image is Available
Fact Check

இஸ்லாமியர்களுக்கு மட்டும் தமிழக முதல்வர் உதவி வழங்கியதாக பரவிய தகவல் தவறானது

தமிழக முதல்வர் இஸ்லாமியர்களுக்கு மட்டும் உதவி வழங்கவில்லை என்றும், அவர் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் உதவி வழங்கினார் எனவும் பூம் கண்டறிந்துள்ளது.

By -  Shobana MR |

10 March 2025 6:18 PM IST

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்ட உதவி இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கியதாக பரவிய தகவல் தவறானது என்று பூம் கண்டறிந்துள்ளது.

எக்ஸ் தளத்தில், இஸ்லாமிய மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு ஸ்டாலின் இணைப்பு சக்கர வாகனம் வழங்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பயனர் ”ஏன் இஸ்லாமியர் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளா இருக்காங்களா Mr. @mkstalin? தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பதிவு ஃபேஸ்புக்கிலும் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

Full View

உண்மைச் சரிபார்ப்பு

இந்த கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கொண்டு கூகுளில் தேடினோம்.

அப்போது, கலைஞர் செய்திகள் சேனல் யூடியூப் பக்கத்தில், கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று, நாகப்பட்டினத்தில் மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில், இந்த நிகழ்ச்சியைப் பற்றின காணொளி வெளியாகியுள்ளது.

Full View

அந்த காணொளியில் 2:35 மணிக்கு, இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்மணிக்கு இணைப்பு சக்கர வாகனத்தை ஸ்டாலின் வழங்குகிறார். அதற்கு முன்னர், அவர் மற்றொரு நபருக்கும் இந்த வாகனத்தை நலத்திட்ட உதவியாக அவர் வழங்குகிறார்.

அந்த நபர் யார் என்பதை கண்டறிய நாங்கள் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடுதல்,@TNDIPRNEWS என்ற எக்ஸ் பக்கத்துக்கு கொண்டு சென்றது. இது தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம்.

இதே நிகழ்ச்சியில், தனக்கு வழங்கப்பட்ட வாகனத்திற்கு ஒருவர் நன்றி தெரிவிக்கும் வீடியோவும் பதிவேற்றப்பட்டு இருந்தது. அந்த நபரும் செய்திச் சேனலில் இருக்கும் நபரும் ஒருவரே என்று பூம் கண்டறிந்தது.

இதன்மூலம், அவரது பெயர் டில்லி பாபு என்பதும், அவர் நெற்றியில் விபூதி வைத்திருப்பதால் அவர் ஒரு இந்து என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:

Related Stories