தமிழ்நாடு முதல்வருக்கு எதிராக பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்திய புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டது என்று பூம் கண்டறிந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து வரும் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், பல சமூக ஊடக பயனர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் கையில் வைத்திருந்த பேனரில் "Get Out Stalin" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு பயனர், “இந்த குழந்தைகள் சொல்வதை நீங்கள் ஆதரித்தால், இதை பகிருங்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் அவர்கள் கையில் வைத்திருந்த பேனரில் "Get Out Stalin" என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு பயனர், “இந்த குழந்தைகள் சொல்வதை நீங்கள் ஆதரித்தால், இதை பகிருங்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு எக்ஸ் தளத்தில் ‘Get Out Stalin’ என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டு வந்தது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையை பூம் சரிபார்க்க, இது AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கண்டறிந்தது.
இந்த புகைப்படத்தைக் கவனமாகப் பார்த்தபோது, அந்த மாணவிகளுள் ஒருவருக்கு ஆறு விரல்கள் இருப்பதை பூம் கவனித்தது.
மேலும், புகைப்படத்தின் கீழ் வலது புறத்தில், 'Grok' என்று எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். Grok என்பது AI உள்ளடக்கத்தை உருவாக்கும் ஒரு கருவி.
அடுத்து, இந்த புகைப்படத்தை HIVE Moderation கருவியில் நாங்கள் பதிவேற்றினோம். அப்போது, இந்த புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை இந்த கருவி காட்டியது. இந்த முரண்பாடுகள் இது AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதிச்செய்தது.
Advertisement