HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Fact CheckNo Image is Available
Fast CheckNo Image is Available
ExplainersNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Fact CheckNo Image is Available
Fast CheckNo Image is Available
ExplainersNo Image is Available
Fact Check

இல்லை, இவர் கும்பமேளாவில் பங்கேற்ற 154 வயது துறவி அல்ல

வைரல் வீடியோவில் இருக்கும் துறவி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சியாராம் பாபா என்றும், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார் எனவும் பூம் கண்டறிந்தது.

By - Shobana MR | 7 Feb 2025 6:48 PM IST

சமூக வலைதளத்தில் கும்பமேளாவில் பங்கேற்ற இமயமலையில் இருந்து 154 வயதான துறவி ஒருவர் வந்தார் என வீடியோ ஒன்று பகிரப்பட்டது. இந்த வீடியோ பதிவு கடந்த நவம்பர் மாதம் பகிரப்பட்டது என்றும், தற்போது அந்த துறவி உயிருடன் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 154 வயதான துறவி ஒருவர் காணப்பட்டார் என பொய்யான கூற்றுடன் ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் இருக்கும் துறவி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சியாராம் பாபா என்றும், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதாவது மகா கும்பமேளா தொடங்குவதற்கு முன்னரே, காலமானார் பூம் கண்டறிந்தது.

"மகா கும்பமேளாவில் பங்கேற்க இமயமலை மலைகளிலிருந்து பல துறவியர் வந்தவண்ணம் உள்ளனர் அதில் ஒரு துறவியின் வயது 154 என்று கூறுகின்றனர். பெருமைமிக்க இந்து", என்று குறிப்பிட்டப்பட்டு இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

இந்த வீடியோ ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளத்திலும் பகிரப்பட்டது.

இந்த வீடியோவின் உண்மைதன்மையை கண்டறிய, பூமின் உண்மை சரிபார்ப்பு அலைபேசி எண்ணிற்கு (+91 77009 06111) அனுப்பபட்டது.

உண்மை சரிபார்ப்பு

அந்த வீடியோவில் இருக்கும் துறவி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சியாராம் பாபா என்றும், அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதாவது மகா கும்பமேளா தொடங்குவதற்கு முன்னரே, காலமானார் பூம் கண்டறிந்தது. 

51 நொடிகள் நீளும் இந்த வைரல் வீடியோவில், மிகவும் தளர்ந்த தோற்றத்துடன் உள்ள துறவி ஒருவர், ஹனுமான் படங்களைத் தான் வணங்குவதற்காக ஒரு பாயில் வைக்கிறார்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, இன்விட் என்ற சரிபார்ப்பு பயன்படுத்தி, வீடியோவை கீஃபிரேம்களாக மாற்றினோம். அதில் சிலவற்றை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அதன் முடிவுகள், இந்த வீடியோவை, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பதிவேற்றிய ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் (mahadev_ka_deewana) கொண்டு சென்றது. 

கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கி, வரும் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறும். நவம்பர் மாதம் பகிரப்பட்ட இந்த வீடியோ பதிவு, கும்பமேளாவுக்கு முன்னதாக எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.


2024 ஆம் ஆண்டு மறைந்த துறவி

ஒரு குறிப்பிட்ட தேடுதல்,  இவரது பெயர் சியாராம் பாபா என்று தெரிவிக்கும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கைக்கு எங்களை கொண்டுச் சென்றது.

இதனுடன், மின்ட் செய்தி வலைதளத்தில் கடந்த டிசம்பர் 11ம் தேதி வெளியான செய்தியின்படி, சியாராம் பாபா கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி காலமானார் என்று கண்டறிந்தோம்.

மேலும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் டாக்டர் மோகன் யாதவின் எக்ஸ் வலைத்தளத்தில், சியாராம் பாபாவுக்காக வெளியிட்ட இரங்கல் செய்தியையும் நாங்கள் கண்டறிந்தோம். 


இந்த துறவி காலமாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துதான், கும்பமேளா கடந்த ஜனவரி 13ஆம் தேதியன்று தொடங்கியது. 


பெரும்பாலான செய்தி அறிக்கைகள், சியாராம் பாபா மறைந்தப்போது 94 வயது எனக் கூறுகின்றன. ஆனால், மற்றோரு தரப்பினர், அவருக்கு வயது 100-யைத் தாண்டி இருக்கும் என்று கூறுகின்றனர். இதனை பூம் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

Tags:

Related Stories