தவறான கூற்றுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக வைரலாகும் பதிவுகள்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக பரவிய இரண்டு கூற்றுகளின் உண்மைத்தன்மையை பூம் கண்டறிந்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர்பாக இரண்டு கூற்றுகளின் உண்மைத்தன்மையை பூம் சரிபார்த்துள்ளது.
ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா வெற்றி அடைந்தபிறகு விநாயகர் பாடல் ஒலித்ததாக காட்டப்பட்ட காணொளி. மற்றொன்று, இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி அடைந்த பின்னர், ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஓர் ஊழியர் இந்தியக் கொடியை பிடித்திருப்பது போல் பரவிய புகைப்படம்.
கூற்று 1 - இந்தியாவின் வெற்றிக்கு பிறகு ஒலித்த விநாயகர் பாடல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த பிறகு, துபாய் சர்வதேச மைதானத்தில் விநாயகர் பாடல் ஒலிக்கப்பட்டதாக இந்த காணொளி காட்டுகிறது.
இந்த காணொளி "இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு விநாயகர் பாடல் ஒலித்தது. பாகிஸ்தானியர்கள் முன்னிலையில் எங்கள் விநாயகர் பாடல் ஒலித்தது," என்ற கருத்துடன் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வந்தது.

உண்மைச் சரிபார்ப்பு
வைரலான இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, அதன் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இந்த தேடுதல் மூலம், இந்த காணொளி இரண்டு வீடியோ கிளிப்கள் இணைத்து எடிட் செய்யப்பட்ட காணொளி என்று பூம் கண்டறிந்துள்ளது.
ஒன்று, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 50வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, பாலிவுட் இசையமைப்பாளர்கள் அஜய்-அதுல் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்த ’தேவ ஸ்ரீ கணேஷா’ என்ற பாடல் ஒலித்த காட்சிகள். மற்றொன்று, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டியின் போது ரசிகர்களால் நிரம்பியிருந்த அரங்கத்தின் காட்சிகள். இந்த இரண்டு கிளிப்களை இணைத்து இந்த வைரல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியின் முதல் பகுதி, பாலிவுட் திரைப்படமான ’அக்னிபத்’தில் இடம்பெற்ற 'தேவா ஸ்ரீ கணேஷா' பாடலை, மக்கள் கைதட்டலுடன் கேட்கிறார்கள். இது மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 50வது ஆண்டு விழாவிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கொண்டாட்டம் இந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதியன்று நடைபெற்றது. இதுகுறித்த இந்த பதிவில் காணலாம்.
இது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதியன்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு முன் நடந்த நிகழ்ச்சி.
இந்த காணொளியின் இரண்டாவது பகுதி, இந்த மாத தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி. இந்த வீடியோவில் இங்கிலாந்து - 175 / 8 என்ற ஸ்கோர்போர்டை காணலாம். இது இந்தியா-பாகிஸ்தான் போட்டியிலிருந்து எடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.

மேலும், நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அதில் இந்த காணொளி, இந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒருநாள் போட்டியிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறும் பதிவு ஒன்றுக்கு கொண்டு சென்றது. இது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோ என்று உறுதிசெய்யப்பட்டது.
கூற்று 2 - இந்திய கொடியை கையில் வைத்திருந்த ஆப்கான் வீரர்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஒருவர் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடியதாக கூறும் புகைப்படம் வைரலானது.

பிப்ரவரி 26ஆம் தேதியன்று லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், எட்டு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வென்றது.
இந்த புகைப்படத்தில், ஆப்கானிஸ்தான் அணியின் ஊழியர் ஒருவர், அணி வீரரான ரஷீத் கானை இந்தியக் கொடியுடன் வரவேற்கிறார். சமூக வலைதளத்தில், “இதற்குத்தான் ஆப்கானிஸ்தானை நான் ஆதரிக்கிறேன்”, “நன்றி ஆப்கானிஸ்தான்” போன்ற கருத்துடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.
உண்மைச் சரிபார்ப்பு
இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, அதில் அந்த ஊழியர் இந்தியக் கொடியை கையில் வைத்திருக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

மேலும், இந்த காட்சியை, ஆட்டத்தின் மறு ஒளிபரப்பில் 9:09:21 மணிக்கு காணலாம். அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் உறுப்பினர் ரஷீத் கான், இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து ஊழியர்கள் உட்பட மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

புகைப்படத்தில் காணப்படுவது நசீர் கான் என்பதை பூம் கண்டறிந்தது. அவர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஊடக மேலாண்மை குழுவில் உறுப்பினராக உள்ளார். பூம் ஊடகத்துடன் பேசிய நசீர் கான், வைரலான புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார். "அப்போது நான் ரஷீத்தை கட்டிப்பிடிக்க சென்றேன். அந்த நேரத்தில், நான் எந்தக் கொடியையும் கையில் வைத்திருக்கவில்லை," என்று அவர் கூறினார்.

